Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த இரண்டரை வருடங்களில் வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை பாரிய அபிவிருத்தி அடைந்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா செட்டிகுளத்தில் நேற்று நடைபெற்ற ஆயர்வேத வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் மக்களால் தெரிவுசெய்யப்ட்ட மாகாண சபை உருவாக்கப்பட்டு 2½ வருடங்கள் முடிவடைந்துள்ளது. கடந்த காலங்களில் சுகாதாரதுறையின் அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை மறுக்கமுடியாது. யுத்தத்துக்கு பின்னரான சூழ்நிலையில் சுகாதார சேவையின் தேவையும் அதிகரித்துள்ளது. மாகாண சபைக்கு நிதிப்பற்றாக்குறை மற்றும் வேறுபல நிர்வாக சிக்கல்கள் உள்ளபோதும் மாகாண மத்திய அமைச்சுகளின் நிதியைகொண்டு இயலுமானவரை சுகாதார துறையை அபிவிருத்தி செய்துள்ளோம்.
குறிப்பாக சுதேச மருத்துவத்துறையை அபிவிருத்தி செய்யவேண்டிய தேவையுள்ளது. பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் சித்தர்களாலும், முனிவர்களாலும் பயன்படுத்தப்பட்ட சித்தமருத்துவம் எமது பாரம்பரிய வைத்திய முறையாகும். இதனை அழியவிடாது பாதுகாக்கவேண்டியது எமது கடமையாகும்.
இதனடிப்படையில் மேலைத்தேய மருத்துவத்திற்கு இணையாக சுதேச மருத்துவ துறையையும் அபிவிருத்தி செய்துவருகின்றோம். சித்தமருத்துவத்தின் தலைநகராக கிளிநொச்சி மாவட்டம் எதிர்காலத்தில் விளங்கும். இதற்கான நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டுவருகின்றோம். 100 ஏக்கர் காணி கிளிநொச்சி கல்மடு நகரில் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 75 ஏக்கரில் மூலிகைத்தோட்டமும், மிகுதியாகவுள்ள 25 ஏக்கரில் மூலிகைமருந்துகளை தயாரிக்கும் மருந்து தொழிற்சாலையும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்தவதற்கு தமிழ்நாடு சித்தமருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago