2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சுதந்திரபுர மக்களுக்குச் சொந்தமான காணி அபகரிப்பு

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் கிராமத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான 12 ஏக்கர் காணியைத் தனியார் ஒருவர் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளதாகப் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறித்த காணியுடன் இணைந்ததாக 20 ஏக்கர் காணியை வைத்திருக்கும் பிரதேசவாசியொருவர், அரசாங்கம் வழங்கிய காணியைக் கையகப்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தில் விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்காகவும் பொதுமக்களின் தேவைக்காகவும் அரசாங்கம் 12 ஏக்கர் காணியை வழங்கியிருந்தது.

யுத்தத்தினால் கைவிடப்பட்ட வாகனங்களைக் குறித்த காணியில் இராணுவத்தினர் நிறுத்தி வைத்திருந்த நிலையில், விளையாட்டு மைதானத்தில் குவிக்கப்பட்டிருந்த வாகனங்களை இராணுவத்தினர் 2015ஆம் ஆண்டு இறுதியில் அகற்றினர்.

இந்த நிலையிலேயே, குறித்த காணியைப் பிரதேசவாசியொருவர்  கையகப்படுத்த முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இக்காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த மே மாதம், பிரதேச மக்களால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .