2025 ஜூலை 07, திங்கட்கிழமை

செய்தியை சொல்வதற்கான உரிமை ஊடகங்களுக்கு உண்டு

Niroshini   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

இளைஞர்களின் நல்ல காரியங்களை நாம் கூறினாலேயே அவர்கள் தாம் ஒரு தகுதியானர்வகள் என்ற எண்ணத்தை உருவாக்குவார்கள் என வவுனியா பொது வைத்தியசாலையின் உளநலமருத்துவ நிபுணர் சிவதாஸ் தெரிவித்தார்,

வவுனியா வைத்தியசாலை தொடர்பாக பல செய்திகள் தவறாக வெளிவருவதாக தெரிவித்து வவுனியா ஊடகவியளலார்களுக்கு வவுனியா பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவால் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்தப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்துத் தெரிவித்த அவர்,

செய்தியை சொல்வதற்கான உரிமை ஊடகங்களுக்கு உண்டு. ஆனால் தொடர்ச்சியான ஒரு தவறான கருத்தை தெரிவிக்கையில் அது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

குறிப்பாக வைத்தியசாலை தொடர்பாக தவறான தகவல் மாத்திரமே வரும்போது அது வைத்தியசாலையை தவறாக காட்டும். இதனால் வைத்தியசாலைக்கும் நோயளர்களுக்குமிடையில் பாரிய பிரச்சினையொன்று ஏற்படும். இதனால் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் கூடுதலாக ஈடுபடத்தொடங்குவார்கள்.

அத்துடன், உண்மையான தங்களுடைய சேவையில் இருந்து பாதுகாப்பு தேடவே முற்படுவார்கள். ஆகவே, ஊடகம் இதில் மிகத்தெளிவான நிலைப்பாட்டை எடுப்பது முக்கியமானதாகும்.

வைத்தியசாலையில் இடம்பெறும் 100 விடயங்களில் 3 விடயங்கள் தவறான விடயமாக நடந்திருக்கலாம். ஆனால், சரியாக நடந்த 97 விடயங்கள் சொல்லப்படாமல் பிழையாக நடந்த 3 விடயங்கள் மர்திரமே வெளிக்கொணரப்படுகின்றது. இதனால் வைத்தியசாலை தொடர்பாக தவறான கருத்தே வெளிவரும்.

குறிப்பாக இளைஞர்களை வழி தவறிப்போனவர்கள், அவர்கள் மூர்க்கமானவர்கள், யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்ற விடயம் அடிக்கடி ஊடகங்களில் வெளிவருகின்றது. இதனால் இளைஞர்கள் அதனை தமக்கான அனுமதிப்பத்திரமாக எடுத்துக்கொள்கின்றனர். ஆகவே, இளைஞர்கள் தொடர்பாக தவறாக சொல்லச்சொல்ல இளைஞர்களின் பிரச்சினை கூடிக்கொண்டே போகும்.

ஆகவே, இளைஞர்களின் நல்ல காரியங்களை நாம் கூறினாலேயே அவர்கள் தாம் ஒரு தகுதியானர்வகள் என்ற எண்ணத்தை உருவாக்குவார்கள். எனவே இது வைத்தியசாலைக்கும் பொருந்தும்.
உறவை சீர்கெடச்செய்வது என்பது இலகுவான விடயம். ஆனால், சீர்செய்வது கடினமானது. ஆகவே செய்தியை இரு தரப்பிடமும் கேட்டு பிரசுரியுங்கள். அதனை செய்தியாக மட்டும்போடுங்கள். அதற்கு பின்னால் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை உள்ளடக்காதீர்கள்.

வவுனியா மாவட்டத்தில் அரச வைத்தியசாலையை தவறாக காட்டினால் தனியார் துறையில் வைத்தியம் பெறுவதற்கு சிறப்பான இடங்கள் போதுமானதாக இல்லை. எனவே, அரச வைத்தியசாலையில் மக்கள் நம்பிக்கை வைக்கும் படியாக செய்வதனாலேயே சிறந்த பலனை மக்கள் பெற கூடியதாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .