Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி பளைப் பகுதியில் 15 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் விடுதி, கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசாவின் உத்தரவுக்கமைய அமைய வியாழக்கிழமை (04) மாலை சீல் வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பளைப்பகுதியில் இயங்கி வரும் குறித்த விடுதியில் வைத்து பதினைந்து வயது சிறுமி, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக பளை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட மூவரை கைது செய்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை ஆஜர்ப்படுத்தினர்.
இதன்போது, மூவரையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறும், விடுதியினை சீல் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில் சிறுமியை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியிருப்பதாகவும் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்;;டு வருவதாகவும் பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்;டத்தில் பதிவு செய்யப்படாத விடுதிகள் இயங்கி வருவதாகவும் இந்த விடுதிகளில் பல்வேறு குற்றச்;செயல்கள் இடம்பெறுவதாகவும் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேபோன்று கிளிநொச்சி இரணைமடு சந்திப்பகுதியில் தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாகத் தெரிவித்;து பெண்களை அழைத்து வந்து வன்புணர்வுக்கு உள்ளாக்கியமை தொடர்பாக விடுதி ஒன்று கடந்தகாலங்களில் சீல் வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago