Editorial / 2024 ஜனவரி 04 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியாவிற்கான அபிவிருத்தி குழு கூட்டத்தினை நடத்துவதற்கு, வௌ்ளிக்கிழமை (05) வவுனியா மாவட்ட செயலாளருக்கு வருகைதரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரினால் வவுனியாவை சேர்ந்த சிலருக்கு நீதிமன்றத்தினூடாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கங்களின் தலைவர், செயலாளர்கள் முன்னாள் அரசியல் கைதியும் போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் அரவிந்தன் ஆகியோருக்கும் குறித்த தடை உத்தரவு பெறப்பட்டிருந்ததுடன் அதன் பிரதிகள் அவர்களுக்கு இன்று (04) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை ஜனாதிபதி வவுனியாவிற்கு வருகை தந்த போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago