Niroshini / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில், நேற்று (06) இரவு, பெண் ஒருவர் இரவு சாப்பாடு சமைத்துக் கொண்டிருந்த போது, எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
எரிவாயு சிலிண்டர் அண்மைக்காலமாக வெடிப்பதால் அவதானமாகவும், முன் எச்சரிக்கையுடனும், குறித்த பெண் இருந்தமையால், உடனடியாக அடுப்பை அணைத்து விட்டு, அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
வெடிப்பின் போது, எரிவாயு அடுப்பு உடைந்து சேதமாகியுள்ளது. இருப்பினும், வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
சம்பவ இடத்துக்குச் சென்ற வவுனியா பொலிஸார், இது தொடர்பில் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
29 minute ago
33 minute ago
46 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
33 minute ago
46 minute ago
10 Nov 2025