Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 மே 09 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபலின்
பளைப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாட்டு வண்டில்காரர் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பளை கிழக்கு புலோப்பளையை சேர்ந்த 05 பிள்ளைகளின் தந்தையான இராசப்பு பாலுப்பிள்ளை (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
கடந்த 2ஆம் திகதி மாட்டு வண்டிலில் எழுதுமட்டுவாள் பகுதியில் ஏ - 9 வீதியால் சென்றுகொண்டிருந்த போது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் வண்டிலை மோதியது. இந்தச் சம்பவத்தில் இரண்டு மாடுகளில் ஒன்று உயிரிழந்ததுடன், வண்டில்காரர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
வைத்தியசாலையின் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு, சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
22 minute ago
58 minute ago