Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 ஜூலை 05 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், 60 ஆயிரம் பேர் தடுப்பூசியைப் பெற தகுதியுடையவர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர் என, மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.உமாசங்கர் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில், 30 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், வயோதிபர்கள், உள்ளிட்டவர்களென, 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி ஏற்றவேண்டும் என்றார்.
இதனை விட, புதுக்குடியிருப்பு, வெலிஓயா ஆகிய பிரதேங்கிளல் உள்ள இரண்டு ஆடைத்தொழில்சாலைகளிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு, தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள ஏனையோருக்கும் தடுப்பூசி ஏற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில், தடுப்பூசி ஏற்றும் சமூக நிலையமாக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்நிலையில், ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் புதிய நடமாடும் தடுப்பூசி ஏற்றும் சமூக நிலையங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
'இதற்கமைய, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான கொரோன தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி சமூக நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வருவோர், மின்சார பட்டியல் அல்லது தொலைபேசி கட்டண சிட்டையுடன் நிரந்தர வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்கான கிராம சேவகரால் வழங்கப்பட்ட உறுதி பத்திரம் அல்லது அடையாள அட்டை அல்லது வாக்காளர் அட்டையை கொண்டு வருவது அவசியமாகும்' என்றும், உமாசங்கர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago