Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 ஜூலை 06 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
பரந்துபட்ட இடமாக காணப்படும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள அனைத்து பகுதி கிராமங்களிலும், தடுப்பூசி ஏற்றப்படுவது தொடர்பில் மக்களுக்கு, சரியான அறிவிப்பு விடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை, பாதுகாப்பு தரப்பினரால் புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியசாலையில், நேற்று (05) முதல் நடைபெற்று வருகின்றது
இதில், வயோதிபர்களுக்கு சரியான அறிவித்தல் விடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
19 கிராமசேவையாளர் பரிவுகளைக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், கடந்த மே மாதம் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, 9 கிராமங்கள் முற்றாக முடக்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்களை கொண்ட பிரதேசமாக புதுக்குடியிருப்பு பிரதேசம் அடையாளங்காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு தரப்பினரால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
ஆனால், இது தொடர்பில், கிராம சேவகர் ஊடாகவோ அல்லது பிரதேச செயலகம் ஊடாகவோ அல்து பிராந்திய சுகாதாரப் பணிமனை ஊடாகவோ எந்த அறிவித்தல்களும் இப்பகுதி பொதுமக்களுக்கு விடுக்கப்படவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதேவேளை, சிலர் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளார்கள். இவர்கள், சைனோஃபோம் தடுப்பூசி ஏற்றுவதற்கு சம்மதமா என கேட்டு படிவம் நிரப்பப்பட்டு, அதற்கான அட்டையொன்றை பெற்றுக்கொண்டு, தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளார்கள். இந்நிலையில். சைனோஃபோம் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் வயோதிபர்கள் பின்னிற்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago