2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

தட்டுவன்கொட்டி கிராமத்துக்கு தினமும் 6 ஆயிரம் லீற்றர் குடிநீர்

Niroshini   / 2016 மார்ச் 27 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, தட்டுவன்கொட்டி கிராமத்தில் உள்ள 358 பேருக்கு தினமும் 6ஆயிரம் லீற்றர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் தினமும் குடிநீர் விநியோகிக்க வேண்டிய பிரதேசமாக காணப்படும் தட்டுவன்கொட்டிக் கிராமத்துக்கு வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை என்றும் இதனால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கரைச்சிப்பிரதேச சபை நிர்வாகத்திடம் கேட்டபோது,

குறித்த கிராமத்துக்கான குடிநீர் விநியோகம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த கிராமத்துக்கான வீதி சீரின்மையால் குடிநீர் விநியோகம் மேற்கொள்வது பெரும்சிரமமாக உள்ளது. இருந்தும் இங்கு குடியிருக்கும் 358 அங்கத்தவர்களுக்கு தினமும் 6 ஆயிரம் லீற்றர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது என பிரதேச சபை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .