Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜெகநாதன்
கிளிநொச்சி, இரணைமடுக்குளத்தின் புனரமைப்புப் பணி எவ்வித தடையுமின்றி திட்டமிட்டவாறு இடம்பெறும் என்பதுடன், அதில் எந்தத் திணைக்களமும் தலையிட முடியாது என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
இக்குளத்தின் புனரமைப்புப் பணியானது ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன்; மத்திய அரசு இணைந்து மேற்கொள்ளும் நிலையில், சில திணைக்களங்களின் அசமந்தப் போக்கால் திட்டம் தடைப்படும் வகையில் உள்ளது.
3,200 மீற்றர் நீளமான குளக்கட்டில், 750 மீற்றர் நீளம் மாத்திரமே கடந்த 5 மாதகாலத்தில் புனரமைக்கப்பட்டுள்ளது. திணைக்களங்கள் தடங்கல் ஏற்படுத்தாது இருந்திருப்பின், இக்காலப்பகுதியில் புனரமைப்புப் பணி முடிவுறுத்தப்பட்டிருக்கும். புனரமைப்புத் தாமதமாவதால், 9 ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரம் 2017ஆம் ஆண்டு பாதிக்கப்படும்.
மேலும், அண்மையில் புதிதாக எல்லைக்கல் நாட்டிய வனவளத் திணைக்களத்தினர், தற்போது தமது பிரதேசத்தில் மண் அகழக்கூடாது என்று தடைபோடுவதான வீடியோக் காட்சி ஆளுநருக்கு விவசாயிகளினால் செவ்வாய்க்கிழமை (13) திரையிட்டுக் காட்டப்பட்டது.
இந்நிலையில், இத்திட்டத்துக்;காக சிபாரிசு செய்யப்பட்ட இடத்தில் எந்தத் தடையுமின்றி நீர்ப்பாசனத் திணைக்களம் மண் அகழ்வதற்கு திணைக்களங்களுக்கு ஆளுநர் தனது அதிகாரத்தின் கீழ் உத்தரவிடவேண்டும் என்று கோரப்பட்டது.
இது தொடர்பில் வனவளத் திணைக்களம் மற்றும் கனியவளத் திணைக்கள அதிகாரிகளுடன் உரையாடிய ஆளுநர், திட்டத்துக்;காக முன்பு அனுமதிக்கப்பட்ட இடத்தில் மண் அகழ்வை மேற்கொண்டு பணியைத் துரிதப்படுத்துமாறு கூறினார்.
எத்திணைக்களத்தினரும் தடையாக இருக்க முடியாது. இருப்பினும், எங்கு தடை ஏற்படுத்தப்பட்டாலும் உடனடியாகத் தொடர்புகொள்ளுங்கள். மறுநாள் சீர்செய்து தரப்படும். எந்தவொரு திட்டமும் நிர்வாகத் தொடர்பாடல் குறையால் தடை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என விவசாயிகளுக்கு அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago