2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

தனியார் கல்வி நிலையங்களுக்கு பூட்டு

Editorial   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா தனியார் கல்வி நிலையங்களை நாளை (03) மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, தனியார் கல்வி நிலையங்களின் சங்கத்தலைவர் தி. கோபிநாத் தெரிவித்தார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகாவித்தியன் தினம் நாளைய தினம் பிரமாண்டமான முறையில் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், இந் நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கோடு, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குறித்த நிகழ்வில் பழைய மாணவர்களுடன் அவர்களது பிள்ளைகளும் நிகழ்வில் கலந்துகொண்வதற்கு இலகுவாக, தனியார் கல்வி நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்குமாறு, வவுனியா நகரசபையின் தலைவர் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

“இதற்கமைய, இந்தக் கோரிக்கையை, தனியார் கல்வி நிலையத்தின் ஒன்றிய நிர்வாகம், இன்று விசேட கூட்டமொன்றின் ஊடாக கவனத்தில் எடுத்து, நாளை 11ஆம் ஆண்டுக்கு உட்பட்ட அனைத்து தனியார் வகுப்புகளையும் நிறுத்துவது எனவும் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புகள் வழமையோபன்று நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டள்ளதது” என, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .