Freelancer / 2022 ஜூன் 02 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உதவிப் பொருட்கள் இன்று (02) காலை புகையிரதம் ஊடாக வவுனியாவை வந்தடைந்துள்ளன.
இந்த உதவிப் பொருட்கள் வசதியற்ற தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
வவுனியா பிரதேச செயலகத்திற்கு 12,015 பொதிகள்
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு 3,560 பொதிகள்
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்திற்கு 2,000, பொதிகள்
வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு 4,575 பொதிகள் என, வவுனியா மாவட்டத்திற்கு மொத்தமாக 22,250 குடும்பங்களுக்கான பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.
இந்த உணவுப் பொதிகளை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் பொறுப்பேற்றுக்கொண்டு குறித்த பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரிடம் கையளித்திருந்தனர். (R)
18 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
1 hours ago