Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 30 , மு.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா, ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள மதுராநகர் கிராமத்தில், அரச கட்டடமொன்றின் அறைக்குள் இந்தியா, தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட நிவாரண அரிசி பதுக்கி வைக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்களால் நேற்று முன்தினம் (28) கண்டுபிடிக்கப்பட்டது.
இவ் விடயம் தொடர்பாக, வவுனியா பிரதேச செயலாளருக்கு கிராம மக்களால் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று (29) மாவட்ட செயலக கணக்காய்வு உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள், உதவி பிரதேச செயலாளர் தலைமையில் குறித்த பகுதிக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
குறித்த அரிசி பாவனைக்கேற்றதா என்பதை ஆராய, பொதுச் சுகாதார பிரசோதகர்களும் அங்கு பிரசன்னமாகி இருந்தனர்.
இதன்போது, 1,272 கிலோ கிராம் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததுடன் இந்த அரிசி, தற்போது பயன்படுத்தும் நிலையில் இல்லை என்பதுவும் தெரியவந்தது.
அப்பகுதி மக்களுக்கு கருத்து தெரிவித்த உதவி பிரதேச செயலாளர்,
கிராம உத்தியோகத்தரின் பக்கம் பிழைகள் இருந்தாலும் கூட, பொது அமைப்புகளுக்கு தெரியாமல் இருக்கவில்லை. தனியே அரச உத்தியோகத்தர்களை வைத்து மட்டும் கிராமத்தை நிர்வகிக்கவில்லை. பொது அமைப்புகளுக்கும் அதற்கான பொறுப்புள்ளது. மக்கள் தங்கள் பிரச்சினையை உரிய தரப்புக்கு எடுத்துக் கூறியிருக்க வேண்டும். இதற்கான பொறுப்பை, பொது அமைப்புகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
ரயில் நிலையத்திலிருந்து வாகனங்களில் கிராமங்களுக்கு பொருட்களை அனுப்பிய போது, மழை காரணமாக அரிசி மூடைகள் சில நனைந்தமையால் இந்த இடத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டது என கிராம சேவகராலும் கிராம அபிவிருத்தி சங்கத்தாலும் தெரிவிக்கப்பட்டது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
28 minute ago
28 minute ago