Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Niroshini / 2021 ஜனவரி 26 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - தவசிகுளம் மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்க முடியும் என்று, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் சமூகவியலாளர் ச,கோபிநாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் தவசிக்குளம் பகுதியில் நீர் வழங்கல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான நீரிணைப்புக் குழாய்களை பொருத்தும் பணியானது தற்போது நிறைவுபெற்றுள்ளதென்றார்.
அதன் தொடர்ச்சியாக, தவசிக்குளம் பகுதியில் வாழும் மக்கள் தங்களுக்கான குடிநீரிணைப்பினைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பின் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வவுனியா பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தில் அல்லது வவுனியா நிலைய பொறுப்ப்பதிகாரி காரியாலயத்த்திலும் தங்களுக்கான விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும், அவர் கூறினார்.
மேலும் எதிர்வரும் 01.02.2021 திங்களன்று, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நிர்மாணப்பிரிவினாரால் தவசிக்குளம் கிராம சேவகர் பிரிவில் நடாத்தப்படஇருக்கின்ற நடமாடும் சேவையினூடாகவும் தங்களுக்கான நீரிணைப்பை பெறுவதற்குரிய விண்ணப்பப்படிவங்களைப் பெற்று தமக்குரிய பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
4 hours ago
8 hours ago
29 Apr 2025