2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் 36ஆவது நினைவு தினம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் 36ஆவது நினைவு தினம் வவுனியாவில் நேற்று வியாழக்கிழமை (01) அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா வரியிறுப்பாளர் சங்கம் மற்றும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில், வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் உள்ள அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி நினைவுகூரப்பட்டதுடன் அடிகளாரின் தமிழ் சேவை தொடர்பில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் கருத்துரையையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் திடீர் மரண விசாரணை அதிகாரியுமான சிவநாதன் கிசோர், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகர பிதா சந்திரகுலசிங்கம், வரியிறுப்பாளர் சங்கத் தலைவரும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவருமான செ.சந்திரகுமார், சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க தலைவர் சேனாதிராசா, வவுனஜியா சைவப்பிரகாசா வித்தியாலயத்தின் உயர்தர மாணவிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .