Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூன் 16 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
கடந்த 8ஆம் திகதி தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து மரணமான கிளிநொச்சி இளைஞனுக்கு, முப்பது இலட்சம் ரூபாயை ஒப்பந்த நிறுவனங்கள் நட்டஈடாக வழங்கியுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுப்பட்டிருந்து கிளிநொச்சி - அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் நிதர்சன் எனும் மாணவன், கடந்த 8ஆம் திகதி தாமரை கோபுரத்தின் 16ஆவது மாடியில் மின் தூக்கி பொருத்துவதற்காக விடப்பட்டிருந்து பகுதிக்குள் சென்று கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
சீனா மற்றும் இலங்கையை சேர்ந்த இரண்டு ஒப்பதந்த நிறுவனங்களே, தாமரை கோபுரத்தின் கட்டுமானப்பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றன. எனவே, மரணமான இளைஞனுக்கு குறித்த நிறுவனங்கள் இணைந்து காப்புறுதி பணம் மற்றும் நிறுவன பங்களிப்பு எனபனவாக முப்பது இலட்சம் ரூபாயை வழங்கியுள்ளன.
குறித்த பணத்தை மரணமான நிதர்சனின் இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரன் ஆகியோரின் பெயரில் நிலையான வைப்பில் வங்கியில் வைப்புச் செய்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
5 hours ago