2025 மே 06, செவ்வாய்க்கிழமை

‘திட்டமில்லாத அரசாங்கமும் திட்டமிடல் இல்லாத ஜனாதிபதியும்’

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 11 , பி.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க. அகரன்

திட்டமில்லாத அரசாங்கமும் திட்டமிடல் இல்லாத ஜனாதிபதியுமே காணப்படுகின்றனர் என வன்னி மாவட்ட பாராளுமன்று உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 

வவுனியா பாரதிபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார். 


தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அடைக்கலநாதன்,

“விவசாயிகளின் வயிற்றில் கை வைத்ததால் இன்று அரசாங்கம் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. 

இன்றையை விலைவாசி உயர்வால் சாதாரணமான மக்களுக்கு வருமானம் குறைவாக உள்ள நிலையில் பொருட்களின் விலை அதிகமாக காணப்படுகின்றது. விலை நிர்ணயம் இல்லாமல் போய் விட்டது. தற்போது அறுவடை இடம்பெறும் நிலையில் விவசாயிகளுக்கு போதிய விளைச்சல் இல்லாமல் காணப்படுகின்றது. 

ஒரு திட்டமில்லாதஅரசாங்கமும் திட்டமிடல் இல்லாத ஜனாதிபதியுமாக காணப்படுகின்றனர். 10 ஏக்கர் விவசாயம்செய்தவர்களை 2 ஏக்கரை இயற்கை முறையில் செய்யுங்கள் என கூறியிருக்கலாம். இல்லையேல் இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு நெல்லை 100 ரூபாவுக்கு பெறலாம் என தெரிவித்திருந்தால் ஏதாவது முயற்சி செய்து விவசாயிகள் செய்திருப்பார்கள். பழக்கம் இல்லாத விவசாயி இதனை செய்ய முடியாதுள்ளது. 

வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முயற்சி செய்து கடந்த அரசாங்கத்தால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இருந்து வளாகம் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. இதனை ஜனாதிபதி திறந்து வைக்கின்றார். நாம் அபிவிருத்தி எதிரானவர்கள் அல்ல.   ஆனால் தமிழ், சிங்களம், ஆங்கிலத்தில் வரவேற்பு நுழைவாயில் காணப்பட்டது. 
ஆனால் தற்போது தமிழ்மொழி அகற்றப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்துக்குகுள் நுழையும்போது சிங்கள மொழியே தெரியவேண்டுமாம். அரசியல் அமைப்பில் தமிழ், சிங்கள மொழிகள் சம அந்தஸ்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனால் அவ்வாறுள்ள மொழிக்கு பாகுபாடு காட்டப்பட்டுள்ளது.  

எமது தமிழ் மொழி இல்லாத இடத்துக்க்ச் சென்று கலந்துகொள்வதனை நாம் விரும்பவில்லை. ஆனால் பல்கலைக்கழகமொன்று வரவேண்டும் என்று முயற்சி எடுத்தோம் அது அமைந்துள்ளது. அது சந்தோசம். 


ஆனால் மொழிக்காகவும் நிலத்திற்காகவுமே நாம் பல போராட்டங்களை செய்தோம். ஆனால் இன்று புறக்கணிக்கப்படுகின்றோம்” எனத் தெரிவித்தார்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X