Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட ஆறு பேர், நேற்று (10) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், கடற்றொழிலாளர்கள் தடைசெய்யப்பட்ட தொழில் நடவடிக்கையையும் சுருக்குவலையையும் தடைசெய்ய கோரி, கடந்த 02ஆம் திகதி அன்று, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் அமைப்புகள் மீனவர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பில், கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரியால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கமைய, நேற்று (10) வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்ட கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மீனவ அமைப்புகளின் தலைவர் செயலாளர்கள் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் எம்.தொம்மைப்பிள்ளை, செல்வபுரம் கடற்றொழிலாளர் கூட்டுறவு அமைப்பின் பொருளாளர் ஏ.ஜெயராசா, கடற்றொழிலாளர் சம்மேளன உப தலைவரும் தீர்த்தக்கரை அன்னை வேளாங்கன்னி கடற்றொழில் அமைப்பின் தலைவருமான வி.அருள்நாதன், செல்வபுரம் கடற்றொழில் அமைப்பின் தலைவர் ஜெறோம்திலீபன், கடற்றொழில் அமைப்பின் தலைவர் பே.பேரின்பநாதன், கோவில் குடியிருப்பு கடற்றொழில் அமைப்பின் தலைவர் ம.மிரண்டா அன்ரனி ஆகியோரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை, முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் எஸ். சுதர்சனின் வாசல் தலத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக, முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .