Niroshini / 2021 நவம்பர் 10 , பி.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை, பட்டப்பகலில் திருடிக்கொண்டு, அதிவேகத்தில் பயணித்தவர் வீதி விபத்தில் சிக்கிய சம்பவம், இன்று, கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை, முசுரம்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்தவர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை தருமபுரம் பொலிசார் மீட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர், இதே பகுதியில் வீட்டில் நிறுத்தி வைத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை களவாடி ஒழித்து வைத்திருந்த நிலையில், பருத்தித்துறை பொலிஸாரால் அவர் கைதுசெய்யப்பட்டு, விசாரணைகள் நடைபெற்று, பின்னர் குறித்த நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்றைய சம்பவம் தொடர்பில், தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வருகின்றனர்.
18 minute ago
41 minute ago
46 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
41 minute ago
46 minute ago
56 minute ago