Niroshini / 2021 செப்டெம்பர் 19 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை, கள்ளியடி பகுதியில், 14 வயது சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது 14) எனும் சிறுவனே, இவ்வாறு வெள்ளிக்கிழமை (17) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கள்ளியடியில் உள்ள கிராம அலுவலகர் ஒருவரின் அரிசி ஆலை ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பான முரண்பாட்டின் காரணமாக குறித்த சிறுவன் தற்கொலை செய்துள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவன் வெள்ளிக்கிழமை (17) காலை கள்ளியடி பகுதியில் அரிசி ஆலை ஒன்றுக்கு அரிசி திரிக்க சென்ற நிலையில், அங்கு பணம் திருடப்பட்டதாக அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் சிறுவனின் நண்பரிடத்தில் கூறிய போது, அவர் எடுத்திருந்தால் பணத்தை திரும்ப தருவதாக கூறியுள்ளனர்.
பின்னர் அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் மற்றும் மகனின் நண்பர்கள் சிலர் இணைந்து குறித்த சிறுவனின் வீட்டுக்குச் சென்று சிறுவனைத் தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில், வீட்டில் மகனை நித்திரையாக்கி விட்டு, தாயார் குளித்து விட்டு வந்த நேரம், தாக்கியவர்கள் மீண்டும் அவர்களது வீட்டில் இருந்து செல்வதை அவதானித்து, தாயார் ஓடி வந்து பார்த்த போது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக, தாயார் தெரிவித்தார்.
இது தற்கொலை அல்ல எனவும் மகன் தற்கொலை செய்யுமளவுக்கு விவரம் தெரியாதவர் எனவும், சிறுவனின் தாய் தெரிவித்தார்.
குறித்த சிறுவனின் மரணம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை இலுப்பைகடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 minute ago
32 minute ago
38 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
32 minute ago
38 minute ago
39 minute ago