Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 06 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
“வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட தகவலுக்கு அமைவாக, கள் இறக்குவதற்கு, பனை, தென்னை மரங்களுக்கு அனுமதி பெறவேண்டும். ஆனால் கித்துள் மரத்தில் கள் இறக்க அனுமதி பெறத் தேவையில்லை என்ற வர்த்தமானி அறிவித்தலின் பாதிப்புத் தொடர்பில், ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பி வைக்கவுள்ளோம். தீர்வு இல்லையேல், மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராடவேண்டிய நிலை ஏற்படும்” என, முல்லைத்தீவு மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி சங்க சமாசத்தின் பொது முகாமையாளர் சி.வேதவனம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி சங்க சமாச வளாகத்தில், இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“20.10.2017 அன்று வர்தகமானியில் பிரசுரிக்கப்பட்ட தகவலுக்கு அமைவாக, பனை, தென்னை மரங்களுக்கு அனுமதி பெறவேண்டும். ஆனால் கித்துள் மரத்தில் கள் இறக்க அனுமதி பெறத் தேவையில்லை என்ற கோரிக்கை, வட மாகாண பனை, தென்னை வளத் தொழிலாளர்களையும் சங்கங்களையும் பாதித்துள்ளது.
“இதன்படி ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவப்பிரகாசம் சிவமோகன் ஊடாக, மகஜர் ஒன்றை அனுப்பிவைக்கத் தீர்மானித்துள்ளார்கள். இதன் பிரதிகள் வடமாகாணசபை முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கின் அமைச்சர்கள் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளது” என்றார்.
இதேவேளை, “போத்தல் கள்ளுக்கான வரியை, நல்லாட்சி அரசாங்கம் அதிகரித்துள்ளது. போத்தல் கள் அடைப்பதற்கான நிலையத்துக்கான ஆண்டு அனுமதித் தொகையும் அதிரித்துள்ளது. இவ்வாறு நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லிக்கொண்டு, இதனை நம்பி தொழில் செய்யும் எங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசாங்கம் நல்ல பதில் தராவிடின், மாவட்ட செயலகத்துக்கு முன் போராட்டம் ஒன்றையும் நடத்தவுள்ளோம்” எனவும் தெரிவித்தார்.
21 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago