Niroshini / 2021 ஜனவரி 05 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
மூன்று கட்சிகளும் கடந்த காலங்களை போன்றல்லாது, ஒன்றாக இணைந்து, தமக்கு தீர்வைப் பெற்று தர வந்துள்ளமை மகிழ்ச்சியாக உள்ளமென்று, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்க தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில,; இன்று (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், மத குருமார் என அனைவரும் சேர்ந்து இம்முறை மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு கால நீடிப்பை வழங்கக்கூடாது என அனைவரும் ஒன்றிணைந்து, நீதி கிடைக்க வேண்டும் எனவும் ஒரு கோரிக்கையை முன்வைக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னைய காலகட்டத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு கால நீடிப்புகள் வழங்கப்பட்டன எனத் தெரிவித்த அவர், அவர்கள் கால நீடிப்பை பெற்றுக்கொண்டதற்கான விடயங்களை நிறைவேற்றவில்லை எனவும் கூறினார்.
எனவே, இம்முறை இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, அதன் ஊடாக ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோமெனவும், அவர் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில், தமது கோரிக்கைக்கு அமைவாகவும், பாதிக்கப்பட்ட தமக்கு நீதி கிடைக்கவும் சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து இலங்கை விடயம் தொடர்பில் நீதியான பொறிமுறை ஒன்றை உருவாக்கி, நீதியை பெற்று தரும் என நம்புவதாகவும், அவர் தெரிவித்தார்.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025