Editorial / 2018 ஜூலை 08 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில், நகரசபைத் தவிசாளர் இ. கெளதமன் தலைமையில் “சுத்தமும் பசுமையும்” எனும் தொனிப்பொருளில் துப்புரவு வாரம், இன்று (08) ஆரம்பமானது.
இது தொடர்பாக நகரசபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“ஆறு வாரங்களுக்கு நடைபெறவுள்ள இச்செயற்றிட்டம், நகர சபைக்குட்பட்ட அனைத்து வட்டாரங்களிலும், தினமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
“நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தை, சுத்தமாகவும் பசுமை நிறைந்தாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது, மக்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும்.
“எனவே, இப்பணியில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டி இருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago