2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தேசிமரக் கன்றுகள் நாட்டும் பணி ஆரம்பம்

Niroshini   / 2020 நவம்பர் 23 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா மாவட்டத்தில், யானை உள்நுழையும் ஆபத்தான  கிராமங்களில் உள்ள பயிர்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலிக்கு அருகாமையில், தேசிமரக் கன்றுகள் நாட்டும் பணி, இன்று (23) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, இதன் முதற்கட்டமாக இறம்பைவெட்டி கிராமத்தில்,  யானைக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலிக்கு அருகாமையில்,  சுமார் 72 கிலோமீற்றரில் 1,500 தேசிமரக் கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், வவுனியா சிவில் பாதுகாப்புப் படை தலைமையக அதிகாரி லெப்டினன்ட் கேணல் சூரியா அஸ்மடலா, வவுனியா வன அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .