Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பழையமுறிகண்டி கிராமத்தில் பல்வேறு தேவைப்பாடுகள் காணப்படுவதாகவும் இவற்றை சீர் செய்து தருமாறும் பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.
முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பழையமுறிகண்டிக் கிராமத்தில் வாழ்ந்து வரும் மக்கள், அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் இவற்றை தீர்த்து வைக்குமாறும் தாங்கள் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக கோரிவருவதாகவும் தெரிவித்தனர்.
இதுவரை தமக்கான அடிப்படை வசதிகள் எவையும் சீர்செய்யப்படவில்லை என்றும் இதனால் தாங்கள் அன்றாடம் துன்பங்களை எதிர்கொள்வதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.
அதாவது பழைய முறிகண்டி கிராமத்துக்கு பிரதான வீதி இன்று வரை புனரமைக்கப்படாது காணப்படுவதால், தமது போக்குவரத்துகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ள பிரதேச மக்கள், இரண்டு கிலோ மீற்றர் வரையான உள்ளக வீதியைப் புனரமைத்துத் தருமாறும் வலியுறுத்தினர்.
நெல் உலர்த்தும் மேடை, கால்நடைகளுக்கான மேச்சல் தரவை என்பவற்றை அமைத்து தருமாறும் பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.
மேற்படி கோரிக்கைகள் தொடர்பில் இவ்வாண்டிலும் பிரதேச செயலாளரிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக, கிராம மட்ட அமைப்புகள் தெரிவித்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .