2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தேக்கு மரங்களைக் கடத்தியவர்களுக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பளைப் பகுதியில் லொறி வாகனத்தில் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரக்குற்றிகளைக் கடத்திச் சென்றவருக்கு, 45 நாட்கள் கட்டாயச் சிறைத்தண்டனையும் 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, புதன்கிழமை (05) தீர்ப்பளித்தார்.

பளைப் பகுதியில் வைத்து, கடந்த மாதம் சாரதியைக் கைதுசெய்த பளைப் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

நேற்று (05) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றச்சாட்;டுப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டபோது, சாரதி தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .