Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Niroshini / 2016 ஜூன் 03 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
துணுக்காய் கல்வி வலயத்துக்கு நிரந்தர கல்விப் பணிப்பாளரை நியமிக்குமாறு முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இக்கல்வி வலயத்தில் கடமையாற்றிய கல்விப் பணிப்பாளர் இரு மாதங்களுக்கு முன்னர் இடம்மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை நிரந்தரக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படாததன் காரணமாக துணுக்காய் கல்வி வலயம் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த வடமாகாண கல்வியமைச்சர் தம்பிராசா குருகுலராஜா,
துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதில் தவறு இடம்பெற்றுள்ளதன் காரணமாக மீளவும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் விரைவில் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படுவார் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago