Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Menaka Mookandi / 2016 ஜூலை 04 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
வட மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையத்தை, தாண்டிக்குளத்தில் அமைப்பதே சிறந்ததென வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கே தான் ஆதரவு வழங்குவதாகவும் விவசாய உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் என்பது முக்கியமான விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், வட மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையத்தை, தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா நிர்மாணிப்பது தொடர்பில், இன்னும் ஒரு வாரத்தில் தீர்வு எட்டப்படும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் கருத்தை அறியும் பொருட்டு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதோடு, அவர்களது கருத்தை எழுத்துமூலம் பெற்று, அதன்பின் தீர்வு காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார மையம் அமைப்பது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று, இரா.சம்பந்தன் தலைமையில், கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றது. இதில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த கலந்துரையாடலின் போது, பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கு அறுவரும் ஓமந்தையில் அமைப்பதற்கு ஐவரும் ஆதரவளித்துள்ளனர். இருப்பினும், இது தொடர்பான தீர்மானம், ஒரு வாரத்தின் பின்னரே எட்டப்படும் என, சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
3 hours ago
3 hours ago