Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூலை 04 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில், தமிழர்கள் கரைவலைப்பாடுகளில், தென்னிலங்கை கடற்றொழிலாளர்கள் தொழில் புரிவது மற்றும் முல்லைத்தீவில் நடைபெறுகின்ற சட்டவிரோத மீன்பிடிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்தார்.
கடந்த மாதம் 28ஆம் திகதி, கொழும்பு கடற்றொழில் அமைச்சின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
'1965ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியை ஆதாரமாகக் கொண்டு முல்லைத்தீவின் கொக்கிளாய் பகுதியில் தமிழர்களுக்கான கரைவலைப்பாடுகள் தான் உள்ளன என நிரூபித்தோம். இக்கரை வலைப்பாடுகளில் அடாத்தாக தென்னிலங்கை கடற்றொழிலாளர்கள் தொழில் புரிந்து வருகின்றனர்.
இதனைத் தடுத்து நிறுத்தி தமிழர்களின் கரைவலைப்பாட்டுப் பகுதியில் தமிழர்களே தொழில்புரிய வேண்டுமென கூட்டத்தில் வலியுறுத்தினோம். அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறுகின்ற சகல சட்டவிரோத மீன்பிடியில் தென்னிலங்கையினைச் சேர்ந்தவர்களே ஈடுபடுகின்றனர்.
முல்லைத்தீவில் நடைபெறுகின்ற சட்டவிரோத தொழில்களுக்கும் கடற்றொழில் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது என்பதை சுட்டிக்காட்டினோம். எமது கருத்துகளை ஏற்றுக்கொண்ட கடற்றொழில் அமைச்சின் செயலாளர் விரைவில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் தலைமையில் கூட்டத்தினை கூடி இவ்விடயம் தொடர்பாக ஒருமாத காலத்துக்குள் சரியான தீர்வினை எடுப்பதென தெரிவிக்கப்பட்டது.
மத்திய கடற்றொழில் அமைச்சில் உருவாக்கப்பட்டுள்ள குழுவில் நானும் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் சி.குணபாலனும் இடம்பெற்றுள்ளோம். கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் முல்லைத்தீவு மேலதிக மாவட்டச் செயலாளர், நாயாறு மீன்பிடிச் சங்கத்தலைவர் ஆகியோரும் கடற்படை இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்' என்றார்.
16 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
31 minute ago