2025 ஜூலை 02, புதன்கிழமை

தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சமூதாயம் சார் சீர்திருத்த மாவட்ட அலுவலகத்தில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு, திங்கட்கிழமை (26) நடைபெற்றது.

தேசிய கைத்தொழில் பயிலுனர் அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தின் வளவாளர்களால் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச்;;சாட்டுடன் தொடர்புபட்டு, நீதிமன்றில் தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டு சமூதாயம்சார் சீர்திருத்த கட்டளைகளுக்கு அமைவாக பணிகளில் ஈடுபட்டு வருபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அவர்களுக்கான தொழில்சார் கற்கை நெறிகளை வழங்கி, தொழில்;களில் ஈடுபடுத்தும் நோக்குடன் இந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

மூன்றாம் நிலைத்தொழில் கல்வி ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்பயிற்சிநெறிகளை பயின்று, அதற்கான தகமைச் சான்றிதழ்களை பெற்றுவதன் மூலம் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளுதல், புதிய தொழில்களை கற்பதன்  மூலம் குடும்ப வருமானத்தை பெருக்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான கருத்துரைகளும் விளக்கங்களும் வழங்கப்பட்டன. 

மேலும், தொழில்சார் கற்கைநெறிகளைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளையும் தொடர்பாகவும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

இதில் சமூதாயம் சார் சீர்திருத்த திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலர் கே.எம்.றஜீம், சமூதாயம் சார் சீர்திருத்த திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட வேலைப் பரிசோதகர் பி.பிரஞ்;சனா தேசிய கைத்தொழில் பயிலுனர் அதிகார சபையின் கிளிநொச்சி பிரதம பரிசோதகர் குகன், கரைச்சிப் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .