Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் இருந்து புதிய கைக்குண்டு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை(10) மாலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.
தாழ்வுபாட்டு கிராமத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதான பிரதான வீதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் இருந்தே இக் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காணியின் உரிமையாளர் காணியை துப்பரவு செய்து கொண்டிருந்த போது காணியின் சுற்று வேலிக்கு அருகாமையில் இருந்து இக் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிராம அலுவலகர் ஊடாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த மன்னார் பொலிஸார் மற்றும்இராணுவத்தினர் குறித்த கைக்குண்டை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கைக்குண்டை செயழிலக்கச் செய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
29 Jun 2025
29 Jun 2025