2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 நவம்பர் 01 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த சிவநகர் கிராமத்தில் கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக 10 துவிச்சக்கரவண்டிகள், நேற்று சனிக்கிழமை (31) யாழ். நல்லூரிலுள்ள நாவலர் மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. 

லண்டன் சைவ முன்னேற்றச் சங்கம், லண்டனிலுள்ள கொசின் இன்சு றியு கராட்டே சங்கம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இந்த துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.

யாழ். பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறைப் பேராசிரியர் மா.வேதநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சு.முரளீதரன், கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலர், கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவின் சமூக சேவைகள் அலுவலர் சு.ஜெயானந்தராஜா, சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவின் சமூக சேவைகள் அலுவலர் வே.சிவராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .