2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

நகரசபை வாயிலில் மனிதச்சங்கிலி போராட்டம்

Niroshini   / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
 
வவுனியா நகரசபை வாயிலில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒன்று, இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
 
வவுனியா நகரசபையின் ஊழியர்கள் சிலர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நகரசபை நிர்வாகத்துக்கு எதிராக, கடந்த சில நாட்களாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகிறனர். 
இதனையடுத்து, அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பொங்குதமிழ் தூபி நேற்றயதினம் நகரசபையால் முட்கம்பியை கொண்டு அடைக்கப்பட்டது.
 
இந்நிலையில் குறித்த ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களால் மனித சங்கிலி போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
 
இது தொடர்பாக நகரசபை தவிசாளர் இ.கௌதமனிடம் கேட்டபோது, இது பொதுவான பிரச்சனை இல்லை. தனிப்பட்ட ஒருவரின் பிரச்சனையே. அவரது நியமனத்திற்கமையவே அவருக்கான வேலை வழங்கப்பட்டது. இந்த போராட்டம் எமது ஊழியர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் அசௌகரியத்தையும் அவமானத்தையுமே ஏற்ப்படுத்தியுள்ளது. 
 
போராட்டம் என்று கூறிவிட்டு பொங்குதமிழ் தூபிக்குள் குடித்து விட்டு முகம் சுழிக்கும் விதமான செயற்பாடுகளை மேற்கொண்டமையாலே, அதனை முட்கம்பியால் அடைத்திருந்தோம். இப்படியான கீழ்த்தரமான வேலையை தூபியில் செய்வதற்கு தலைவர் என்றவகையில் இடமளிக்க முடியாது. இது ஒரு பிழையான போராட்டம் என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .