Niroshini / 2020 நவம்பர் 23 , பி.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன், மு. தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் தடை உத்தரவு தொடர்பான நகர்த்தல் பிரேரணை தொடர்பான வழக்கு விசாரணை, நாளை (24) வரை ஒத்திவைத்து, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சின்னப்பு சிவபாலசுப்ரமணியம், இன்று (23) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 20ஆம் திகதியன்று, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் அடங்கலாக 17 பேருக்கு, நினைவேந்தலை நடத்துவதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த தடை உத்தரவுக்கு எதிரான நகர்த்தல் பிரேரணை, இன்று தாக்கல் செய்யப்பட்டது.
மாவட்ட நீதவான் நிதிமன்ற நீதவான் இன்றைய தினம் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாத நிலையில், பதில் நீதவான் குறித்த பிரேரணை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு, நாளை வரை விசாரணைகளை ஒத்திவைத்தார்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago