2025 ஜூலை 21, திங்கட்கிழமை

நடத்துநர் மீது தாக்குதல்

Editorial   / 2017 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்  

பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த போக்குவரத்து சபை பஸ்ஸின் நடத்துநரை தாக்கி 5 பவுண் நகை, 35ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசி, 10 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஒன்று, யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் பகுதியில், நேற்று (28) இடம்பெற்றுள்ளதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.  

மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர், இத்தாக்குதலை மேற்கொண்டுவிட்டு பணம், நகை என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.  

தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே, இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X