2025 ஜூலை 02, புதன்கிழமை

நந்திக்கடலின் இறால் பெருக்கம் குறைந்துள்ளது

Princiya Dixci   / 2016 மே 22 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு நந்திக்கடலின் இறால் பெருக்கம் குறைந்துள்ளதாக கடற்றொழிலாளர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

ஆண்டுதோறும் மாரி மழை பொழிகின்றபோது நந்திக்கடலில் நீர் மட்டம் உயரும். இதன்போது வட்டுவாகல் பகுதியில் அணை வெட்டப்பட்டு, நந்திக்கடலின் நீர் பெருங்கடலுடன் கலப்பது ஆண்டுதோறும் நிகழ்கின்ற சம்பவமாகும்.

ஆனால், இவ்வாண்டு பெய்த கடும் மழை காரணமாக மூன்று தடவைகளுக்கு மேல் நந்திக்கடல் நீர் பெருங்கடலுடன் கலந்தமையால் இறால் பெருக்கம் நந்திக்கடலில் குறைவடைந்துள்ளது.

இதனைவிடவும் முல்லைத்தீவு முத்தையன்கட்டுக்குளம் புனரமைப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக இக்குளத்தின் நீர் நந்திக்கடலினையே தொடர்;ச்சியாக வந்தடைந்த வண்ணம் உள்ளது. இதனாலும் இறால் பெருக்கம் குறைவடைந்துள்ளது.

இதன் காரணமாக நந்திக்கடலினையே நம்பியுள்ள 4,000 வரையான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .