2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நன்னடத்தை பாடசாலையில் ஆன்மிக வழிகாட்டல்

George   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நன்னடத்தை  சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் ஆன்மீக வழிகாட்டல்கள் இடம்பெற்று வருகின்றன.

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு, நீதமன்றங்களினால் தண்டிக்கப்பட்ட 45 மேற்பட்ட சிறுவர்கள், இந்த சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள், தமது தவற்றை உணர்ந்து, மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ்வதற்கான ஆன்மீக ரீதியான போதனைகள் மற்றும் யோகாசனப் பயிற்சி என்பன வழங்கப்பட்டு வருகின்றன.

இங்குள்ள அதிகாரிகளின் பார்வையில், இவர்கள் ஒருபோது தண்டனையாளர்களாக கருதப்படுவதில்லை. அவர்களால் பெற்றோருடன் இணைக்கப்படுவதற்கான பொறிமுறைகள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றன.

பயிற்சி அளிக்கப்பட்ட சீர்திருத்த அதிகாரிகளின் உதவியுடன், சத்தியசாயி நிலையத்தினால் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆன்மீக வழிபாடுகள் நடெபெறுவதுடன் பொழுது போக்கு அம்சங்களாக விளையாட்டு, கோழிவளர்ப்பு, விவசாயம், விலங்குகளுக்கு தீனி வைத்தல் போன்ற செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்கிருந்து வெளியேறி சென்று சமூகத்தில் சிறப்பாக வாழ்வதற்கான தொழில் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இங்குள்ளவர்களுக்கு தச்சுவேலை, மோட்டார் சைக்கிள் திருத்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பயிற்சியினை சிறந்த முறையில் நிறைவு செய்வோருக் 20,000 ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் திருத்தும் சாவிப்பொதிகள் வழங்கப்படும் என அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .