2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

நலத்திட்ட நிதிகளை கோரி கிளிநொச்சியில் நாளை போராட்டம்

Yuganthini   / 2017 ஜூலை 09 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நலத்திட்ட நிதிகளை வழங்குமாறு கோரி, கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினர், காலவரையறையற்ற தொடர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

 

வடமாகாண பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்தில் உள்ள கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்துக்கு வரவேண்டிய நிதியை பேரிணையம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியே இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

 

இதற்கமைய, நாளை (10) காலை 07.30 மணி தொடக்கம் கிளிநொச்சி டிப்போச் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள, கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .