Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என.நிபோஜன்
யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இராணுவம் மற்றும் பொலிஸாரிடத்தில் சென்று காணாமல் போனவர்கள் என பல்லேறு தரப்பினரை அவர்களது உறவினர்கள் தேடி வருகின்றனர். இவர்களின் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெரிவித்தார்.
நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க, ஞானம் அறக்கட்டளையினரின் நிதி உதவியில் கிளிநொச்சி பூநகரி மக்களிற்கான மழைநீர் சேமிப்பு திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். இதன்பின்னர் கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“இப்போதுள்ள அரசாங்கத்தின் மூலம் இரண்டும் பிரதான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களிற்கான அபிவிருத்தி மற்றும் காணாமல் போனோரை கண்டறிதல் ஆகிய இரண்டுமே இதுவாகும்.
யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்இ இராணுவம் மற்றும் பொலிஸாரிடத்தில் சென்று காணாமல் போனவர்கள் என பல்லேறு தரப்பினரை அவர்களது உறவினர்கள் தேடி வருகின்றனர். இவர்களின் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சம்மந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
நல்லிணக்கத்துக்கான அமைப்பின் பிரதான வேலைகளாக பல திட்டங்கள் தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டமான மழை நீர் சேமிப்பு திட்டத்தினையும் குறிப்பிடலாம். மேலும், பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்பும் செயற்திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
6 hours ago
9 hours ago
9 hours ago