2025 மே 09, வெள்ளிக்கிழமை

நாயாறில் மேலும் எழுவருக்கு தொற்று

Niroshini   / 2021 ஜூலை 07 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு  - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட நாயாறு பகுதியில், தென்பகுதி மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபர்களை கிருஸ்ணபுரம் கொரோனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக, சுகாதார தரப்பினர், அப்பகுதிக்குச் சென்ற நிலையில், அங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் புத்தளத்துக்கு  சென்றுவிட்டதாக, சுகாதார தரப்பினருக்கு தகவல் வழங்கப்பட்டது

முடக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதி உள்ளபோது, குறித்த நபர் எவ்வாறு வெளியே சென்றுள்ளார் என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவம் சுகாதார தரப்பினர், ஏனைய 6 பேரையும் கிருஸ்ணபுரம் கொரோனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எதுவித சுகாதார கட்டுப்பாடுகளுமின்றி, குறித்த பகுதியில் குடியிருக்கும், இந்த மீனவர்களில், 28 பேருக்கு  கடந்த 29ஆம் திகதியன்று, பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில்  5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதைதொடர்ந்து, குறித்த பகுதியில் அனைவருக்கும் பி சி ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க ஏற்பாடு செய்தபோதும் அதற்கும் குறித்த பகுதி மக்கள் ஒத்துழைக்கததால், பல்வேறு சிரமங்களின் மத்தியில், ஜுலை 2ஆம் திகதியன்று, 74 பேருக்கு மாத்திரம் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் மறுநாள் 3ஆம் திகதி காலை முதல் குறித்த பகுதி முடக்கப்பட்டது. இந்நிலையில், 74 பேரிடம் மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள், இன்று (07) வெளியானது. இதன் போதே, 7 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X