2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

நிலங்களை பகிர்ந்தளிக்க நடவடிக்கை

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - புத்துவெட்டுவான் பகுதியில், புதிதாக புனரமைக்கப்பட்ட வாணிமோட்டை குளத்தின் கீழ் உள்ள வயல்நிலங்களை, விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பிரதேச செயலக தவவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்துவெட்டுவான் கிராமத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட வாணி மோட்டை குளத்தைப் புனரமைத்து, அதன் கீழ் உள்ள சுமார் நூறு ஏக்கர் வரையான வயல்நிலங்களை, பிரதேசத்தில் காணிகள் இன்றி வாழும் குடும்பங்களுக்கு, பயிர்ச் செய்கைகளுக்கு பகிர்ந்தளிக்குமாறு, பிரதேச மக்களும் விவசாய அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன.

இந்நிலையில், குறித்த காணிகள் ஏற்கெனவே வனவளத் திணைக்களத்தின் கீழ் காணப்பட்டதனால், இவற்றை பகிர்ந்தளிப்பதில் கால தாமதங்கள் காணப்பட்டன.

தற்போது, குறித்த காணிகளை வனவளத் திணைக்களத்திடம் இருந்து விடுவித்து, காணிகளற்ற விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பிரதேச செயலகத் தகவலில் ​மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .