Editorial / 2019 மார்ச் 24 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க அகரன்
ஆறு மாதம் சிறைத்தண்டனை வழங்கியமைக்காக, நபரொருவர் தனது கழுத்தை அறுத்துகொண்ட சம்பவமொன்று, வவுனியா நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் இடம்பெற்றது.
குறித்த சம்பவத்தில், கே.லக்ஸ்மன் (வயது 33) என்பவரே, இவ்வாறு காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று முன்தினம், வவுனியா நீதிமன்றத்துக்கு வழக்கு நடவடிக்கைளுக்காக சென்ற நபர் ஒருவர், நீதிமன்றின் நடவடக்கைகளுக்கு குழப்பத்தை விளைவித்தார் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் அவருக்கு ஆறு மாதம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கபட்டது.
இதன் நிமித்தம் பொலிஸாரால் அவர் நீதிமன்ற கூண்டுக்குள் அடைக்கப்பட்டார். இதன்போது தனது பையில் வைத்திருந்த சிறிய பிளேடால் அவரது கழுத்தை அறுத்து கொண்டார்.
தையடுத்து, காயமடைந்த நபரை மீட்ட பொலிஸார், வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
13 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago