Editorial / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில், புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், மார்ச் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இன்றைய தினம் (26), குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படுமென்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், மார்ச் 15ம் திகதியன்று, வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுமென, நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம், குறித்த வழங்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பௌத்த மதகுரு சார்பில் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மொழிபெயர்ப்பு செய்து பார்வையிட வேண்டுமென காரணம் காட்டியே, வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
நீராவியடிப் பிள்ளையார் கோவிலில், ஜனவரி 14ஆம் திகதியன்று, பொங்கல் வழிபாடுகளுக்காகச் சென்ற பிரதேச தமிழ் மக்களுக்கும், கோவில் வளாகத்தை ஆக்கிரமித்து குடியிருக்கும் பௌத்த பிக்குவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த முறுகல் நிலை, அப்பகுதியின் அமைதிக்கு பங்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்து, முல்லைத்தீவு பொலிஸாரால், ஜனவரி 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026