2025 மே 09, வெள்ளிக்கிழமை

நீராவியடி பொங்கல் விழா: 10 பேருக்கு அனுமதி

Niroshini   / 2021 ஜூலை 11 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் கோவிலின்  வருடாந்த பொங்கல் விழாவுக்கு, இம்முறை 10 பேர் மாத்திரமே கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதியன்று, நீராவியடிப் பிள்ளையார் கோவிலின்  வருடாந்த பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தற்போதைய கொரோனா அசாதாரண நிலையைக் கருத்திற்கொண்டு, குறித்த பொங்கல் விழாவில், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, 10  பேர் மாத்திரம் கலந்துகொள்வதற்கு, கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் அனுமதியளித்துள்ளது.

அதாவது, நாட்டில் நிலவுகின்ற கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, சுகாதார மற்றும் சுதேச வைத்தியசேவைகள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, 10 பேரை மட்டும் உள்ளடக்கியதாக கோவில் கிரியைகளை எளிமையான முறையில், சமூக சுகாதார இடைவெளிகளைப் பின்பற்றி, 12ஆம் திகதி மாலை தொடக்கம் 13ஆம் திகதி மாலை வரை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகத்துக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் கடிதம் மூலம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X