2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

நூறு நகரங்கள் அபிவிருத்தி: ’வவுனியாவும் இணைவு’

Niroshini   / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

இலங்கையின் நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், வவுனியா நகரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.

வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இதற்காக ஒரு வருடத்துக்கு முன்பாகவே தாம் கள நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாகவும் தற்போது  சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுவதாகவும் கூறினார்.

'அந்தவகையில், மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து, தமிழ்மத்திய மகா வித்தியாலயம், பொது வைத்தியசாலை வரையான வீதி, பூங்கா வீதி ஆகியவற்றில் நடைபாதைகளை அமைத்தல், மற்றும் எ9 வீதிக்கு அருகாமையில் உபவீதி ஒன்றை அமைத்து, அதனோடு இணைந்தவாறான வாகன தரிப்பிடம் ஒன்றையும் அமைப்பது தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தோம். இந்த வேலைத்திட்டங்கள் நிச்சயம் நடக்கும்' எனவும், அவர் கூறினார்.

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் திலீபனுக்கும் இந்த திட்டம் தொடர்பாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை வவுனியா சுற்றுலாமைய குத்தகையாளர் நகர சபையின் நிபந்தனைகளை மீறியுள்ளாரெனத் தெரிவித்த அவர், 'தனக்கான ஓர் இடமாகவே அவர் அதனை மாற்றியுள்ளார். எனவே ஆளுநரின் அறிவுறுத்தலின் படி அவரது ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 31ஆம் திகதியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைகின்றது. அதனுடன் அதனை நடாத்துபவர் வெளியேற வேண்டிவரும்' என்றார்.

இது தொடர்பாக நீதிமன்ற வழக்கும் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த அவர், வழக்கு முடிவடைந்ததும் அதனை நகர சபையே பெற்று, சபை நிர்வாகத்தின் கீழ் செயற்படுத்தப்படும் என்றும், தவிசாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X