Niroshini / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
களை நெல்லை (பன்றி நெல்) விவசாயிகள் ஒன்றிணைந்து கட்டுப்படுத்த தவறின், மாவட்டத்தில் பாரிய நெல் உற்பத்தி வீழ்ச்சி ஏற்படும் அபாயம் என, கிளிநொச்சி மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் பொன்னையா அற்புதச்சந்திரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர். கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெற்செய்கையில் களை நெல் எனப்படும் விவசாயிகள் குறிப்பிடும் பன்றி நெல்லின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் விவசாயிகள் குறித்த நெல் களையை கட்டுப்படுத்த தவறின் எதிர்காலத்தில் மாவட்டத்தில் நெல் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறினார்.
கிளிநொச்சி மாவட்டத்தில், காலபோக நெற்ச்செய்கை பாரிய குளங்கள், மானாவாரி செய்கை அடங்கலாக 71,024 ஏக்கரில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்த அவர், காலபோக செய்கையில் குறித்த களை நெல்லின்
தாக்கம் அதிகரித்து வருவதாகவும் கூறினார்.
முரசுமோட்டை, உருத்திரபுரம், கணேசபுரம், பூநகரி ஆகிய பகுதிகளிலேயே, அதிகளவு பரவி வருவதாகத் தெரிவித்த அவர், வயலில் நீர் உள்ள போதும், விதைப்பதற்கு முன்பு விதைகளை சுத்திகரித்து, நீர்ப்பாசன வாய்க்கால்களை சுத்தம் செய்து, நெல்லை விதைப்பதன் மூலம் ஓரளவு கட்டுப்படுத்த கூடியதாக இருக்குமெனவும் கூறினார்.
'ஆரம்பத்திலேயே குறித்த களையை விவசாயிகள் இனங்கண்டு, கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்டு சிவப்பு நீறமாகவும் நெல்லை விட வேகமாக வளரக்கூடியது. இனிவரும் காலங்களில் களைநாசினி பயன்பாடு இல்லாது போனால், இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்கும்' என்றும், அவர் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago