Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
George / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார், சுப்பிரமணியம் பாஸ்கரன்
“தங்களின் சொந்த நிலங்களில் மீள்குடியமர்த்தக் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் தொடர்பில், நாடாளுமன்றத்தில் விசேட கவனம் செலுத்துவதற்கு மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளதாக, முன்னணியின் முன்னாள் நாடான்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “ஒரே இரவுக்குள் கேப்பாப்புலவு மக்களின் பிரச்சினையைம் தீர்க்க முடியாது என்று, நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்களாகியும் இந்த மக்களின் பிரச்சினை இதுவரை தீர்க்கப்படவில்லை. தமது பிரச்சினையை தீர்க்குமாறே இம்மக்கள் கோரி வருகின்றனர். அது நல்லாட்சி அரசாங்கத்துக்கு புரியவில்லை.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தப்பின், மக்களின் காணிகள், மக்களிடமே கையளிக்கப்படும் என தேர்தல் காலத்தில் வாக்குறுதியை வழங்கியிருந்தது. ஆனால், அவ்வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, இந்த அநீதியான செயற்பாட்டை, மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக எதிர்க்கிறது.
நாடாளுமன்ற அமர்வுகளின்போது, கேப்பாவிலவு மக்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்த, ஜே.வி.பி தீர்மானித்துள்ளது. இதுவரை காலமும் இடம்பெறாதது போன்ற ஒரு நடவடிக்கையை, மக்கள் விடுதலை நாடாளுமன்றில் முன்னெடுக்கவுள்ளது.
கேப்பாப்புலவு மக்களின் பிரச்சினையை அரசாங்கம் தீர்க்காதுவிடின், இந்தப்பிரச்சனை வடக்கு, கிழக்கு முழுவதும் பாரிய பிரச்சினையாக மாறும்.
பின்னர் அது, நாடு தழுவிய ரீதியில் போராட்டமாக வெடிக்கும். எனவே, கேப்பாப்பிலவு மக்களின் பிரச்சினையை உடனடியாக தீர்க்குமாறு, அரசாங்கத்திடம் கோருகின்றோம்” என்று அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
54 minute ago
1 hours ago