2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நியமனம் வழங்குமாறு கோரிக்கை விடுத்து ஜனாதிபதிக்கு கடிதம்

George   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

வன்னி மாவட்ட ஆசிரிய உதவியாளர்களை, ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்குமாறு வலியுறுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, வன்னி ஆசிரிய உதவியாளர் ஒன்றியம் கடிதம் அனுப்பியுள்ளது.   

இந்தக் கடிதத்தின் பிரதிகள், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இராஜாங்கக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில், 15 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றி வரும் எமக்கு, கடந்த 2005ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஆசிரியர் நியமனம், இன்றுவரை வழங்கப்படாத நிலையில், நாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு வருகின்றோம்.  

நீண்ட போராட்டங்களைத் தொடர்ந்து, கடந்த 2013ஆம் ஆண்டு எமக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதாகக் கூறி, ஆசிரிய உதவியாளர் என்னும் நியமனம் வழங்கி, அதற்கான 6,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது.  

ஆசிரியர் பயிற்சி கலாசாலைப் பயிற்சிகளை நிறைவு செய்து, 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், எம்மை இலங்கை ஆசிரியர் சேவையினுள் உள்ளீர்ப்புச் செய்து, எமது சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  

ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்பட்ட 01.07.2013ஆம் திகதியிலிருந்து வன்னி ஆசிரிய உதவியாளர்கள் 500 பேரையும் இலங்கை ஆசிரியர் சேவையினுள் உள்ளீர்ப்புச் செய்து எமக்கான சம்பள நிலுவைக் கொடுப்பனவுகளையும் 01.07.2013ஆம் திகதியிலிருந்து வழங்க நடவடிக்கை எடுத்து உதவுமாறு தங்களை மிகுந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்” என அந்தக் கடிதத்தில் எடுதப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .