2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

பசளை உற்பத்தி: 'குறைபாடுகள் தீர்க்கப்படும்'

Niroshini   / 2021 ஜூலை 15 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

சேதன பசளையை உற்பத்தி செய்வதில் உள்ள குறைப்பாடுகள் விரைவில் தீர்க்கப்படும் என்று, கடற்றொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவுக்கு இன்று (15) விஜயம் செய்த அவர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மிகவிரைவில் வவுனியா மக்களுக்கான கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுமென்றார்.

அத்துடன், வனவளத் தினைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பாக தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அந்த விடயம் தொடர்பாக தொடர்புடைய அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறினார்.

அந்தக் காணிகளின் விவரங்களை உரிய அமைச்சர் கேட்டுள்ளாரெனத் தெரிவித்த அவர், எனவே ஓரிரு மாதங்களில் அந்த பிரச்சினையை தீர்க்கலாம் என்று நம்புகிறேனெனவும் கூறினார்.

மேலும், வடக்கில், புரவிப் புயலில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைத் திரட்டி அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பித்திருக்கின்றோம். எதிர்வரும் அமைச்சரவைக்கூட்டத்தில் அதன் முடிவுகள் எட்டப்படும் என்றார்.

மக்கள் நலன் கருதியே இரசாயன பசளைக்கு பதிலாக சேதன பசளைகளை உற்பத்திசெய்யும் திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்தியது. எதிர்வரும் வருடத்தில் இருந்தே அதனை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னெடுப்பதில் உள்ள குறைபாடுகள் எல்லாம் விரைவில் தீர்க்கப்படும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X